டோனி அந்த விஷயத்தில் அவகாசம் கொடுத்துள்ளார்.... இந்திய தேர்வாளர் சொன்ன முக்கிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியை தயார் செய்ய தேர்வு குழுவுக்கு டோனி அவகாசம் கொடுத்துள்ளதாகவும், அவர் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அணித்தேர்வாளர் கூறியுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. உலகக்கோப்பை, டி20, சாம்பியன்ஸ் டிராபி போன்ற மூன்று வித கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த வீரர் என்ற சாதனையையும் டோனி படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்காக சிறந்த பினிஷராகவும் இருந்துள்ளார். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டோனியின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக சரியில்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரிஷப் பாண்டை இந்திய தேர்வு குழுவினர் நம்பியுள்ளனர்.

ஆனால் ரிஷப்பாண்டோ ஒரு போட்டியில் நல்ல விளையாடுகிறார், இன்னொரு போட்டியில் ஏதோ விளையாட தெரியாதவர் போல் அவுட்டாகிறார். இதனால் ரசிகர்கள் இவரை எப்படி நம்புவது என்று புலம்பி வருகின்றனர்.

இதையடுத்து மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த டோனியை, தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரிலும் தேர்வு குழுவினர் எடுக்கவில்லை.

இதனால் டோனி ஓரங்கட்டப்படுகிரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து தேர்வு குழுவின் தேர்வாளர் ஒருவர் டோனி இந்திய அணிக்கு அவகாசம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

டோனி அணியில் எடுக்கப்படாதது குறித்து கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணியில் டோனி இல்லாததால் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலதரப்புகளிலும் கேள்வி எழுந்துள்ளன.

ஆனால் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 அணிக்கான இந்திய அணியைத் தயார் செய்ய டோனி அணித்தேர்வுக்குழுக்கு அவகாசம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி வீரர்கள் கையில் உள்ளதையும் போதிய பெஞ்ச் பலம் இருப்பதையும் உறுதி செய்து விட்டால் தான் தன் கிரிக்கெட் வாழ்வு குறித்து முடிவெடுப்பதாகவும் தோனி கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் பாண்ட் காயமடைந்தால் இவருக்கும் உண்மையான மாற்று விக்கெட் கீபபர் நம்மிடம் இல்லை என்பதையும் பரிசீலித்து டோனி தன் வரவை நிறுத்தி வைத்துள்ளார். இப்போதைக்கு அவரை புறக்கணிக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் மேற்கிந்திய தீவு தொடருக்கு முன்னால் அவர் 2 மாத கால ஓய்வு எடுத்துக் கொண்டார், அது இன்னமும் முடியவில்லை

டோனியிடம் இன்னும் அமர்ந்து எதிர்காலம் பற்றி பேசவில்லை. அதனால்தான் எதிர்கால அணி, திட்டம் போன்றவற்றை உறுதி செய்ய அவர் எங்களுக்கு கால அவகாசம் அளித்துள்ளார்.

மேலும் பந்த் காயமடைந்து விட்டால், உலக டி20 போட்டிக்கு அவர் ஆட முடியாமல் போனால், குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் டோனியை தாண்டி நமக்கு வெளிச்சம் எதுவும் இல்லை.

டோனி அணிக்கு எப்படி ஆடுவார் என்பதை அணி நிர்வாகம் தெரிந்து வைத்துள்ளது. இன்றுவரை கூட ஒரு பினிஷராக அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆடியிருந்தால் கூட டோனி என்பவர் எப்படிப்பட்ட வலுவான வீரர் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

நம்மிடம் பினிஷர்கள் இருப்பார்களேயானால், நாம் அவரை முன் வரிசையில் இறக்கி அவருக்காக செய்ய முடியாதா என்ன? உலகக்கோப்பையின் போது கூட பின் வரிசை வீரர்களுடன் ஆட அவரைப்போன்ற அனுபவசாலி தேவை என்பதாகவே நாங்கள் முடிவெடுத்தோம்.

350 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 98 டி20 போட்டிகளிலும் ஆடிய ஒருவரைப் பற்றி கருத்து கூறுவது எளிது. அவர் அணியை எத்தனைப் போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார் என்பதும் பலரும் அறிந்ததே. இன்றைய தொழில் நுட்ப உலகில் எதிரணியினர் அவரது பலம், பலவீனங்களை அலசாமல் இருப்பார்களா என்ன? அவர்களும் வெல்வதற்காகவே களமிறங்குகின்றனர்.

அவர்கள் வீசுவதையெல்லாம் டோனி தூக்கித் தூக்கி அடிக்க அனுமதிப்பார்களா என்ன? நாம் நேர்மையாக பேசுவோம். பண்ட் காயமடைந்தால் நமக்கு உண்மையில் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மாற்று வீரர் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் இன்னும் டோனி போய்விட்டால், சரியான மாற்று வீரர் பாண்ட்டை தவிர வேறு யாரும் இல்லை என்பதால், டோனி இந்திய தேர்வு குழுவுக்கு அவகாசம் கொடுத்துள்ளார் என்பது புரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்