கோஹ்லி-அகர்வால் அரைசதத்தில் நிமிர்ந்த இந்தியா... மிரட்டிய ஹோல்டர்: முதல் நாள் ஆட்டம்

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

அதன் படி நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் துவக்க வீரர் லோகேஸ் ராகுல் 13 ஓட்டங்களிலும், சட்டீஸ்வர் புஜாரா 6 ஓட்டங்களிலும் வெளியேற, மயங்க் அகர்வால் மற்றும் கோஹ்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை ஹோல்டர் பிரித்தார். அரைசதம் அடித்த அகர்வால் 55 ஓட்டங்களிலும், இவரைத் தொடர்ந்து கோஹ்லியையும் ஹோல்டர் 76 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

இதையடுத்து வந்த ரஹானே 24 ஓட்டங்களில் வெளியேற, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்திய அணியில் ஹனுமன் விஹாரி 42 ஓட்டங்களிலும், ரிஷப் பாண்ட் 27 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவில் வேகப்பந்து வீச்சாளர் ஹோல்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்