ஆக்ரோஷமாக பந்துவீசும் மலிங்கா.. இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட புகைப்படங்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக இலங்கை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள், இலங்கை கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி, நாளை தொடங்கும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை பல்லெகெல்லேவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்பாக, கடந்த 29ஆம் திகதி நடந்த பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனவே, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இலங்கை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை மின்னொளி வெளிச்சத்தில் இலங்கை வீரர்கள் வலை பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அணியின் மூத்த வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா ஆக்ரோஷத்துடன் பந்து வீசுகிறார். அவரைப் போல் பிற வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த புகைப்படங்களை இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்