சச்சின் டெண்டுல்கரின் புதிய அவதாரம்.. அடுத்தடுத்து வெளியிட்ட வீடியோக்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர், ‘Fit India' இயக்கத்தை ஆதரிக்கும் விதமாக தான் பங்கேற்ற விளையாட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 29ஆம் திகதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ‘Fit India'எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் 28 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

இதனை வரவேற்கும் விதமாக, பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரும் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் டென்னிஸ், கோல்ப் விளையாடிய வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் #SportPlayingNation, #FitIndiaMovement எனும் ஹேஷ்டாக்குகளை குறிப்பிட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிய வீடியோவினை வெளியிட்ட அவர், இன்று கோல்ப் விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘மற்றொரு விளையாட்டு, ஆனால் எல்லா வகையிலும் ஒரு சிறப்பு நாள்! வில்லிங்டன் கோல்ப் மைதானத்தில் எனது முதல் ஆட்டம்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோக்கள் முன்னணி வீரர்கள், சச்சின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்