46 பந்துகளில் சதம்.. சுழன்று அடித்த வீரர்! கனவை சிதறடித்த மோர்கன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில், சோமர்செட் அணி வீரர் டாம் அபெல் 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் டவுடானில் நடந்த போட்டியில் டாம் அபெல் தலைமையிலான சோமர்செட் அணியும், டேவிட் மாலன் தலைமையிலான மிடில்செக்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சோமர்செட் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் டாம் பேண்டான் 62 ஓட்டங்கள் விளாசினார். எட்வர்டு பைரோம் அதிரடியாக 44 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

எனினும் கடைசி வரை நின்று விளையாடிய அணித்தலைவர் டாம் அபெல், எதிரணியின் பந்துவீச்சை புரட்டியெடுத்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 46 பந்துகளில் சதம் விளாசினார்.

Gavin Ellis/TGS Photo

மொத்தம் 3 சிக்சர்கள், 13 பவுண்டரிகளை அவர் விளாசியிருந்தார். இதன்மூலம் சோமர்செட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் குவித்தது.

Getty Images

அதனைத் தொடர்ந்து மிடில்செக்ஸ் அணி களமிறங்கியது. அணித்தலைவர் டேவிட் மாலன் 41 ஓட்டங்கள் விளாசினார். ஸ்டெர்லிங்(25), டி வில்லியர்ஸ்(32) ஆகியோர் தங்கள் பங்குக்கு ஓட்டங்கள் சேர்த்தனர். எனினும் இயான் மோர்கன் தனியாளாய் நின்று அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

சிக்சர்களாக பறக்க விட்ட அவர், 29 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அவரது ஆட்டத்தின் மூலம் மிடில்செக்ஸ் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்