முதல் சதத்தை பதிவு செய்த ஹனுமா விஹாரி: 416 ரன்கள் குவிப்பு

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் ஹனுமா விஹாரி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இறுதி டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டமானது கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் 264 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாளில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ஹனுமா விஹாரி-இஷாந்த் சர்மா கூட்டணி இணைந்து எட்டாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் குவித்து அணியை வலுப்படுத்தியது.

போட்டியின் போது ஹனுமா விஹாரி 200 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் இஷாந்த் சர்மா தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்த சிறிது நேரத்திலே இருவரும் விக்கெட்டுகளை பறிகொடுக்க இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 416 ரன்கள் குவித்திருந்தது.

அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 111 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை துவங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்