நாட்டுக்காக விளையாடவில்லை.. இதற்காக தான் ஆடுகிறேன்! மனம் திறந்த தமிழக வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

தான் நாட்டுக்காக விளையாடவில்லை, மனதிருப்திக்காக மட்டுமே விளையாடி வருவதாக தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட உள்ளார்.

சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார் முரளி விஜய். இந்நிலையில் தான், பாகிஸ்தான் வீரர் அசார் அலிக்கு பதிலாக சோமர்செட் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ADRIAN DENNIS/AFP

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆர்வம் மற்றும் மனதிருப்திக்காக தான் கிரிக்கெட் விளையாடுகிறேன்.

மிகப்பெரிய பங்களிப்பை எனது போட்டிகளில் கொடுத்து வருகிறேன். எந்த அணியாக இருந்தாலும் எனது பங்களிப்பை சிறப்பாக கொடுப்பேன். அணியை விட யாரும் சிறந்தவர்கள் அல்ல.

அது அணித்தலைவர் விராட் கோஹ்லியா? இல்லையா? என்பது அல்ல. யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ரோஹித் ஷர்மா அணிக்காக மட்டுமல்லாமல், நாட்டிற்காகவும் விளையாடுவார்.

என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் விளையாட்டில் இதை தான் செய்தேன். இதனால் எந்த மாற்றமும் நிகழாது என்பது நன்றாகவே தெரியும். ஆனால், வாய்ப்பு தான் ஒரு சிறந்த அனுபவத்தை தரும். அதை தான் எதிர்பார்க்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்