எனக்கு 12 வயதாக இருக்கும்போதே.. சதத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்: கலங்கிய இந்திய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதம் விளாசிய இந்திய வீரர் ஹனுமா விஹாரி, தனது தந்தைக்கு சதத்தை அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜமைக்காவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டில், இந்திய அணி 416 ஓட்டங்கள் குவித்தது.

மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களிலும், கோஹ்லி 76 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்த நிலையில், நங்கூரம் போல் நின்று ஆடிய ஹனுமா விஹாரி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த அவர், 225 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் குவித்தார்.

AFP

இந்நிலையில், சதம் விளாசியது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு 12 வயதாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். அப்போது நான் முடிவு செய்தேன், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் நான் அடிக்கும் முதல் சதத்தை, அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று.

இன்று எனக்கு உணர்வுப்பூர்வமான நாள். அவர் இதனை எங்கிருந்தாவது பார்த்து பெருமைப்படுவார் என்று நம்புகிறேன். மேலும் இதனை சாதித்ததை நினைத்து நானும் பெருமை கொள்கிறேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்