இலங்கைக்கு இரட்டை அடி... அணியிலிருந்து மெண்டிஸ்,ஜெயசூர்யா வெளியேற்றம்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசிய டி-20 போட்டியில் குசால் மெண்டிஸ் மற்றும் ஷெஹன் ஜெயசூர்யா இருவரும் விளையாட மாட்டார்கள் என இலங்கை கிரிக்கெட் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் பீல்டிங் செய்யும் போது மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யா காயம் அடைந்தனர்.

பீல்டிங் செய்யும் போது இரு வீரர்களுக்கிடையில் மோதியதைத் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டது, இதன் காரணமாக 3வது டி-20 போட்டியில் ஆட்டத்தில் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யா பங்கேற்க வாய்ப்பில்லை, என்று இலங்கை அணி மேலாளர் Asantha De Mel அறிக்கையில் தெரிவித்தார்.

மெண்டிஸிக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஜெயசூர்யாவுக்கு வலது காலில் முழங்காலுக்கு மேலே காயம் ஏற்பட்டுள்ளது. மெண்டிஸிக்கு புதன்கிழமை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துள்ளார், ஸ்கேன் அறிக்கை பிற்பகலில் வர உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Associated Press

காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யா இருவரும் விளையாடுவது நிச்சயமற்றதால் இலங்கைக்கு இரட்டை அடி ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது., செப்டம்பர் 6ம் திகதி பல்லேகேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி டி 20 போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்