பிராட்டின் வேகத்தில் வீழ்ந்த வார்னர்.. சமாளித்து நின்ற ஸ்மித்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஸ்டீவன் ஸ்மித்தின் அபார ஆட்டத்தினால் அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக வார்னர், ஹாரிஸ் களமிறங்கினர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் முதல் ஓவரை மிரட்டலாக வீசினார்.

அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே, டேவிட் வார்னர் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஹாரிஸும் பிராட்டின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

RYAN PIERSE/GETTY IMAGES

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், லபுசாக்னே இருவரும் கைகோர்த்தனர். நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடிய இந்த ஜோடி 116 ஓட்டங்கள் குவித்தது. லபுசாக்னே 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

AP Photo

எனினும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 170 ஆக இருந்தபோது மழை காரணமாக, முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஸ்டீவன் ஸ்மித் 60 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பிராட் 35 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

AP Photo

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்