கோஹ்லி தரவரிசைப்பட்டியலில் ஸ்மித்திடம் வீழ்ந்தது எப்படி? வெளியான காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ஸ்மித்திடம் வீழ்ந்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகளின் முடிந்துள்ள நிலையில் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது, இதில் ஒரு போட்டி டிராவி முடிந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி, இந்த முறை ஒரு புள்ளியல் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கோஹ்லி 903 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து கானே வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதனால் கோஹ்லி ரசிகர்கள் இது எப்படி? ஒரு புள்ளி எங்கே போனது? என்று புலம்பி வரும் நிலையில், கோஹ்லிக்கு எப்படி முதலிடம் பறிபோனது என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.

அதில், மேற்கிந்திய தீவு தொடரில் கோஹ்லி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறினார். முதல் போட்டியில் ஆடிய அவர் மொத்தமே 60 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

இதில், முதல் 9 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டத்தில் 51 ஓட்டங்கள் அடங்கும். இரண்டாவது போட்டியில் 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

குறிப்பாக இரண்டாவது போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். இதுவே இவரது முதல் இடத்தை இழக்க காரணமாக அமைந்தது.

அவுட்டாகாமல் சரியாக 21 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இருந்தால் போதும் விராட் கோஹ்லி தனது முதலிடத்தை ஒரு புள்ளியில் தக்க வைத்திருப்பார். இப்படியாக அவர் ஸ்மித்திடம் முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்