இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்களா? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் கையில் இருந்த மேட்சை சினேகன் ஜெயசூர்யா மற்றும் குசால் மென்டிஸ் ஆகியோர் செய்த சிறிய தவறால் நியூசிலாந்து வென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், அடுத்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாட வேண்டியிருந்தது.

இதனால் கடந்த 3-ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

அதே போன்று அன்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கடைசி 4 பந்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது மூன்றாவது பந்தை சந்தித்த சாண்டனர் பந்தை பவுண்டரியை நோக்கி உயரே அடித்தார். பந்தை கேட்ச் பிடிக்க ஓடிய சினேகன் ஜெயசூர்யா அதில் வெற்றி கண்டார். அவர் கேட்ச் (catch) பிடித்து விட்டார் என எண்ணிய அடுத்த கணத்தில், குசால் மென்டிஸ் அவர் மீது கடுமையாக மோதினார்.

பந்தை கேட்ச் பிடிக்க குசால் மென்டிஸ்-உம் ஓடி வந்துள்ளார். ஜெயசூர்யா பந்தை கேட்ச் (catch) பிடித்ததை எதிர்பார்க்காத மென்டிஸ் அவர் மீது மோதினார். அதனால், பவுண்டரி எல்லையை தாண்டி விழுந்தார் ஜெயசூர்யா. அந்த பந்து சிக்ஸ் சென்றதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆட்டம் டிராவாக, அடுத்த பந்தில் சாண்டனர் பவுண்டரி அடித்து தோல்வியில் இருந்த நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் இலங்கை ரசிகர்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இது என்று கூறி வைரலாகி வருகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்