8 நாட்கள் வித்தியாசம்.. உலக சாதனை படைத்த ரஷித் கான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக பொறுப்பேற்று, சர்வதேச அளவில் இளம் வயதில் அணித்தலைவர் பதவியைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.

Chattogram-யில் தொடங்கிய இந்த டெஸ்டில், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ரஷித் கான் பொறுப்பேற்றார். இதன்மூலம் அவர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, இளம் வயதில் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற ஜிம்பாப்வேயின் தைபு சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.

Google

இலங்கைக்கு எதிரான போட்டியில் தைபு தனது 20 வயது 358 நாட்களில் அணித்தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், ரஷித் கான் 20 வயது 350 நாட்களில் அணித்தலைவராகி, 8 நாட்கள் வித்தியாசத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் பட்டோடி 21 வயது 77 நாட்களில் தலைமை ஏற்றிருந்தார். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 22 வயது 15 நாட்களிலும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டீவ் ஸ்மித் 22 வயது 82 நாட்களிலும் தங்கள் அணிக்கு தலைமை ஏற்றிருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்