இரட்டை சதம் விளாசினார் ஸ்மித்..! சச்சினை ஓரங்கட்டி.. இங்கிலாந்தை கதறவிட்டார்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து-அவுஸ்திரேலியாவுக்கு எதிரான Old Trafford மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது ஆஷஸ் டெஸ்டில் ஸ்மித் இரட்டை சதம் அடித்து பட்டையை கிளப்பினார்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழந்து 23 ஓட்டங்களுடன் இங்கிலாந்து களத்தில் உள்ளது.

இரண்டாவது நாள் முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி ஸ்மித்தின் அதிரடி இரட்டை சதம் மற்றும் ஸ்டார்க்கின் அதிரடியால் 8 விக்கெட் இழந்து 497 ஓட்டங்கள் குவித்தது.

211 ஓட்டங்கள் விளாசிய ஸ்மித் , ஏற்கெனவே இந்த ஆஷஸ் தொடரின் நான்கு இன்னிங்சில் மட்டும் 144, 142, 92, 211 என்று 589 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ஸ்மித், டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

பிராட்மேனுக்குப் பிறகு, ஆஷஸ் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறை தொடர்ச்சியாக 500-க்கும் கூடுதலாக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்மித்.

2019 ஆஷஸ் தொடரில் தனது 24வது, 25வது மற்றும் 26 வது டெஸ்ட் சதங்களை அடித்த ஸ்மித், இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 26 சதத்தை பதிவு செய்த வீரர் என்ற பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் குறைந்த இன்னங்சில் 26வது சதத்தை எட்டிய வீரர்கள் பட்டியல், முதலிடத்தில்அவுஸ்திரேலியாவின் பிராட்மேன் 69 போட்டிகள். அவரை தொடர்ந்து 121 போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்மித். 136 போட்டியில் சச்சின் இந்தியா.

Image
Twitter

ஆனால், இந்த இரட்டைச் சத இன்னிங்சில் அதிர்ஷ்டமும் ஸ்மித் பக்கம் இருந்தது. ஸ்மித் 65 ஓட்டங்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை ஸ்மித் நேராக அவரிடமே அடிக்க கேட்சை எடுக்காமல் தவறவிட்டார் ஜோப்ரா ஆர்ச்சர்.

பிறகு ஸ்மித் 118 ஓட்டங்களில் இருந்த போது ஜாக் லீச் பந்தில் பென் ஸ்டோக்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று தெரியவர ஸ்மித் பிழைத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்