எனது பந்துவீச்சின் ரகசியம் இதுதான்.. சாதனை நாயகன் மலிங்கா!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, தனது பந்துவீச்சு ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று பல்லெகெல்லேவில் நடந்த 3வது டி20 போட்டியில், இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, மலிங்காவின் புயல்வேக பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மிரட்டலாக பந்துவீசிய மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டி20யில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

AFP

இந்நிலையில், தனது பந்துவீச்சின் ரகசியம் குறித்து அவர் கூறுகையில், ‘இந்தப் போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான்கு பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியது பற்றி கேட்கிறார்கள். இரண்டாவது முறையாக நான் இப்படி விக்கெட் வீழ்த்தியிருக்கிறேன்.

இது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த நான்கைந்து மாதங்களாக இலங்கைக்கு கடினமான நேரம். இந்த நேரத்தில் இலங்கைக்கு வந்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு நன்றி. எனது பந்துவீச்சு ரகசியம் பற்றி கேட்கிறார்கள். அதில் சிக்கல் ஏதுமில்லை. யார்க்கர்தான் எனது சிறப்பு. சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...