மிகுந்த வருத்தத்தில் இலங்கை ஜாம்பவான் சங்ககாரா வெளியிட்ட உருக்கமான பதிவு!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் காதிரின் மறைவுக்கு, இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் கான், தனது 63வது வயதில் நேற்றைய தினம் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாராவும் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அப்துல் காதிரின் திடீர் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சாம்பியன் மற்றும் ஜாம்பவான் நித்திய ஓய்வுக்கு சென்றுவிட்டார்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அப்துல் காதிர் 67 டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்டுகளையும், 104 ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர். டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சு 9/56 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...