ஆமை வேக ஆட்டம்.. இங்கிலாந்தை நடுங்க வைத்த ஹெசல்வுட்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்மித் 211 ஓட்டங்களும், லபுசாக்னே 67 ஓட்டங்களும் விளாசினர்.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டென்லியை(4) அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வெளியேற்றினார்.

Getty Images

பின்னர் வந்த ஓவர்டானை 5 ஓட்டங்களிலேயே ஹெசல்வுட் ஆட்டமிழக்க செய்தார். இந்நிலையில் அணித்தலைவர் ஜோ ரூட், தொடக்க வீரர் பர்ன்ஸ் இருவரும் கைகோர்த்தனர். இந்த கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும் ரன் ரேட் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்ன்ஸ் 81 ஓட்டங்களில் ஹெசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஜோ ருட்டையும்(71) எல்.பி.டபிள்யூ முறையில் ஹெசல்வுட் அவுட் ஆக்கினார். ஹெசல்வுட் அபார பந்துவீச்சால் இங்கிலாந்தின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.

PA

5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேசன் ராய் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார். நேற்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அவுஸ்திரேலிய தரப்பில் ஹெசல்வுட் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...