டோனி ஆடவில்லை என்றால்.. இந்திய சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளே

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியில் டோனி ஆடவில்லை என்றால், அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் கூடி விவாதிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி, உலகக் கிண்ண தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் ரிஷாப் பாண்டுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்திய கிரிக்கெட் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டோனி ஓய்வு பெற்றால் அவருக்கு முறையான வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளேயும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Sandeep Saxena

டோனியின் ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், ‘இந்திய அணியின் விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பாண்ட், குறிப்பாக டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால், சமீப காலமாக அவரது ஆட்டம் நிலையற்றதாக இருக்கிறது.

டோனி தொடர் வேண்டுமா? என்பது பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும். வரும் டி20 உலகக் கிண்ண தொடர் வரை அவர் அணியில் இருக்கிறார் என்றால், ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஆட வேண்டும்.

இதுபற்றி தேர்வுக்குழுவினர் கூடி, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். டோனி ஆடவில்லை என்றால் அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் கூடி விவாதிக்க வேண்டும். இதுபற்றி அவர்கள் டோனியிடமும் பேச வேண்டும். அவர் ஓய்வு பெற்றால் முறையான வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும். அதற்கு டோனி தகுதியானவர்தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers