ஆஷஸ் தொடர்: 4-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா... ஆட்டநாயகன் விருது வென்ற ஸ்மித்

Report Print Abisha in கிரிக்கெட்

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரட்டை சதமடித்து ஸ்டீவன் ஸ்மித் அசத்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 301 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு 383 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சவாலான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவில் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

முடிவில் 197 ஓட்டங்களில் சுருண்டதால் 185ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரட்டைச் சதம் உட்பட மொத்தம் 293 ரன்களைக் குவித்த ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாகனான அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்றது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 12-ம் திகதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் தொடர் சமநிலையையே எட்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...