மாரடைப்பால் மரணமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்! கண்ணீருடன் பிரியாவிடையளித்த ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அப்துல் காதில் உயிரிழந்த நிலையில் அவர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று பிரியாவிடை அளித்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பவான் அப்துல் காதிர் (67) சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார்.

பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்டுகளில் விளையாடி 236 விக்கெட்டுகளும், 104 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

இந்நிலையில் அப்துலின் இறுதி ஊர்வலம் காராச்சியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இன்சாமம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் ஜனசா தொழுகையில் பங்கேற்றனர்.

மேலும் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்