2009 இலங்கை அணி மீதான தாக்குதல்... மலிங்கா, மேத்யூஸ் உட்பட இலங்கையின் 10 வீரர்கள் அதிரடி முடிவு

Report Print Basu in கிரிக்கெட்

மலிங்கா உட்பட இலங்கையின் பத்து மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இலங்கை கிரிக்கெட் வாரிய வளாகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், இலங்கையின் முன்னாள் விமானப்படைத் தளபதி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் Roshan Goonetileke, பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கையின் சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுக்கு விளக்கினார்.

எனினும், இந்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு வார காலம் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள 10 வீரர்கள் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2009 மார்ச்சில், பாகிஸ்தானில் இலங்கை அணி பயணித்த பேருந்து மீது ஆயுதமேந்திய துப்பாக்கிதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதே வீரர்களின் புறக்கணிப்புக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று நடந்த தாக்குதலில் ஆறு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர், ஆறு பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா, மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டி சில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பேரேரா, கருணாரத்னே ஆகியோர் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 27ம் திகதி முதல் அக்டோபர் 9ம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள சுற்றுப் பயணத்தில் இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்