முக்கிய ஒருநாள் தொடரில் தமிழக வீரர்கள் அஸ்வின்-தினேஷ் கார்த்திக் மற்றும் முரளிவிஜய்க்கு இடம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணியில் அஸ்வின், விஜய் சங்கர், முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இந்த தொடரில் பங்குபெறும்.

இத்தொடர் வருகிற 24ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்திய அணி வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய்சங்கர், முரளி விஜய் ஆகியோரும் இதில் இடம்பிடித்துள்ளனர்.

அணி விபரம்
 • தினேஷ் கார்த்திக்(அணித்தலைவர்)
 • விஜய் சங்கர்
 • அபிநவ் முகுந்த்
 • என்.ஜெகதீசன்
 • பாபா அபரஜித்
 • ஆர்.அஸ்வின்
 • வாஷிங்டன் சுந்தர்
 • வி.கங்கா ஸ்ரீதர் ராஜூ
 • ஹரி நிஷாந்த்
 • பிரதோஷ் ரஞ்சன் பால்
 • லோகேஷ்வர்
 • கே.முகுந்த்
 • முரளி விஜய்
 • டி.நடராஜன்
 • கே.விக்னேஷ்
 • எம்.முகமது
 • அபிஷேக் தன்வார்
 • ஜே.கவுசிக்
 • சாய் கிஷோர்
 • எம்.சித்தார்த்
 • எம்.அஸ்வின்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்