துடுப்பாட்டம்-பந்துவீச்சு இரண்டிலும் முதலிடம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர்கள் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை, ஒரு புள்ளி வித்தியாசத்தில் முந்தி அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்டில் 211 மற்றும் 82 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அவரது புள்ளிகள் 937 ஆக உயர்ந்தது.

எனவே, ஸ்மித் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இதேபோல் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், 914 புள்ளிகளுடன் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கம்மின்ஸ் 4வது டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுவரை அவர் ஆஷஸ் தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தரவரிசையில் கம்மின்ஸுக்கு அடுத்த இடத்தில், தென் ஆப்பிரிக்க அணியின் ரபாடா உள்ளார். ஆனால், அவர் 851 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் கம்மின்ஸ் மிகப்பெரிய வித்தியாசத்தில் முதலிடத்தில் நீடிப்பார் என தெரிகிறது.

இதன்மூலம் துடுப்பாட்ட தரவரிசை மற்றும் பந்துவீச்சு தரவரிசை இரண்டிலும் அவுஸ்திரேலிய வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...