கோஹ்லியின் கனவுக்கு ஆப்பு வைத்த ஸ்மித்... எப்படி தெரியுமா? வெளியான புள்ளிவிவரம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்மித் ஓராண்டு தடையில் இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில், முதலிடத்தில் இருந்த ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி, இந்திய அணியின் தலைவரான கோஹ்லி முதல் இடத்தை பிடித்தார்.

ஓராண்டு தடைக்கு பின் மீண்டும் வந்த ஸ்மித், தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கிடையில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி, டக் அவுட் ஆனதால், ஸ்மித் அவரை பின்னுக்கு தள்ளி 904 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.

ஒரு புள்ளியால் கோஹ்லியின் முதலிடம் பறிபோன நிலையில், தற்போது நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 211 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 82 ஓட்டங்கள் என குவித்ததால், தற்போது ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கோஹ்லியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று எட்டா உயரத்திற்கு சென்றுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக புள்ளிகள், அதாவது 947 புள்ளிகள் பெற்று ஸ்மித் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

இன்னும் அதே சாதனையை மீண்டும் படைக்க 10 புள்ளிகள் மட்டும் தான் தேவை, இங்கிலாந்துடன் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி இருப்பதால், ஸ்மித் அந்த சாதனையையும் படைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி 34 புள்ளிகள் ஸ்மித் அதிகம் பெற்றுள்ளதால், கோஹ்லியின் முதலிடம் கனவு இனி சில மாதங்களுக்கு நினைத்து பார்க்காத ஒன்று என்றே கூறலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்