நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு இமாலய ரன் குவித்த கிறிஸ் கெய்ல்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் அணி 241 ரன்களை குவித்திருந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில், ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் நேருக்குநேர் மோதின.

இதில் டாஸ் வென்ற நெவிஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 241 ரன்களை குவித்தது.

அணியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 116 ரன்களை குவித்து தன்னுடைய 22வது சதத்தை பதிவு செய்தார். இதில் 10 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும்.

அதேபோல மற்றொரு புறம் சாட்விக் வால்டன் 36 பந்துகளில் 73 ரன்களை குவித்திருந்தார்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தது. துவக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால், அந்த அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்