இலங்கை அணியை தாக்க சதிதிட்டம்.. பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை: கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவு

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மறுபரிசீலனை செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை பாகிஸ்தானில் இலங்கை மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 10 முக்கிய இலங்கை வீரர்கள் ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கையின் ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை குறித்து மறுபரிசீலனை நடத்த இலங்கை கிரிக்கெட், இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாடியது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நம்பகமான தகவல்களை பிரதமர் அலுவலகம் பெற்றுள்ளது என்பதை இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தீவிர கவனம் செலுத்தவும், நிலைமையை மறுபரிசீலனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்