அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது.. எங்களுக்காக வேண்டும்! கொந்தளிக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு சாதமான ஆடுகளத்தை தயார் செய்துவிட்டார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் புற்கள் நிறைந்து காணப்படும் என்பதால், டியூக்ஸ் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

இதனால் அங்கு விளையாட செல்லும் அணிகள் மிகப்பெரிய அளவில் தடுமாறும். எனவே, இங்கிலாந்துக்கு அவர்களின் ஆடுகளங்கள் மிகப்பெரிய பலம்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில், ஆடுகளங்கள் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘எங்களை காட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்துவிட்டதாக நான் கருதுகிறேன். நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்போது, அவர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகிறது.

அவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது, அவர்களுக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சரியானது என்று என்னால் பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆடுகளத்தை கொடுத்தார்கள்.

CARL RECINE/REUTERS

ஆடுகளத்தில் புற்கள் இல்லாவிடிலும், இந்தியாவை விட எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் ஆடுகளம் எங்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டது. எங்களது கிரிக்கெட் வாரியம் போதுமான வகையில் போட்டியை நடத்தும் நாட்டிற்கான வாய்ப்பை வழங்கவில்லை.

அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, அவர்கள் அவர்களுக்கு எற்றபடி ஆடுகளத்தை தயார் செய்கிறார்கள். அதேபோல் எங்களுக்கு சாதகமான வகையில் கொஞ்சம் கூடுதலாக, சாதகமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers