டோனி என்னை அப்படி ஓட விட்டார்... மறக்கவே முடியாது: கோஹ்லி வெளியிட்ட படம்

Report Print Basu in கிரிக்கெட்

2016 டி-20 உலகக் கோப்யைில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்த போட்டியை நினைவு கூர்ந்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி, அது தன்னால் மறக்க முடியாத போட்டி என குறிப்பிட்டுள்ளார்.

டோனிக்கும்-கோஹ்லிக்கும் இடையில் உள்ள நட்பு நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்ததே.

இந்நிலையில், 2016 டி-20 உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியாவை வென்ற பின்னர் மைதானத்தில் டோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை கோஹ்லி வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்ட கோஹ்லி, என்னால் மறக்க முடியாத போட்டி. ஓர் சிறப்பான இரவு. டோனி, என்னை ஒரு உடற்பயிற்சி சோதனையைப் போல ஓடச் செய்தார் என கூறி நெகிழ வைத்துள்ளார்.

குறித்த போட்டியில் டோனி-கோஹ்லி இணைந்து சிறப்பாக விளையாடி போட்டியை வென்றனர். டோனி சிக்சர் விளாசிய வெற்றி இலக்கை எட்டுவார். குறித்த போட்டியில் சிறப்பாக விளையாடி கோஹ்லி 51 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்