அதிர்வலைகளை ஏற்படுத்திய விடயம்.. போதையில் ரகசியத்தை உளறிய வார்னர்.. அம்பலப்படுத்திய இங்கிலாந்து வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அலெஸ்டர் குக், தனது சுயசரிதையில் அவுஸ்திரேலிய வீரர் வார்னர் பந்தை சேதப்படுத்தியது குறித்து கூறியதை குறிப்பிட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் அறிவுறுத்தலின் பேரில், இளம் வீரர் பான்கிராஃப்ட் உப்புத்தூளை வைத்து பந்தை சேதப்படுத்தி, ஸ்விங் செய்ய வைக்க முயற்சி செய்தார்.

அதனைத் தொடர்ந்து நேரலையில் அவர் சிக்கினார். பின்னர் நடந்த விசாரணையில் டேவிட் வார்னர் மற்றும் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் மூவருக்கும் தடை விதிக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Getty Images

தடைகாலம் முடிந்து தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரில் வார்னர், ஸ்மித் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் அலெஸ்டர் குக் தனது சுயசரிதை புத்தகத்தில், வார்னர் பந்தை சேதப்படுத்தியது எப்படி என்பது குறித்து அவரே கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 2017-18 ஆஷஸ் தொடரின்போது முதல் தர போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு பின் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டேவிட் வார்னர் 2 பீர் குடித்துள்ளார். அதன் பின் அலெஸ்டர் குக்கிடம் பேசி இருக்கிறார்.

போதையில் இருந்த வார்னர், தென் ஆப்பிரிக்க போட்டியின் போது தன் கையில் சில பொருட்களை வைத்திருந்து தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் பந்தின் வேகத்தை அதிகரித்ததாகவும் கூறியுள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குக், அருகில் நின்றுகொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் முகத்தைப் பார்த்துள்ளார். உடனே வார்னரைப் பார்த்த ஸ்மித், இதை நீ சொல்லி இருக்கக்கூடாது என்பதுபோல கண்களை உருட்டி விழித்துள்ளார்.

இதனை தனது புத்தகத்தில், ‘ஏன் வழக்கமான வழிகளில் பந்தை சேதப்படுத்தாமல் திடீர் என உப்புத் தாள் பயன்படுத்தினீர்கள்? அவுஸ்திரேலியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், இது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல விடயம் அல்ல. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்’ என அலெஸ்டர் குக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்