உலககோப்பையில் ஏமாந்துட்டேன்... ஆனால் இந்த முறை அது எங்களுக்கு தான்! சபதம் எடுத்த ஹார்திக்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா ஒரு உலகக்கோப்பை தொடரில் ஏமாற்றம் அடைந்துவிட்டேன், ஆனால் டி20 உலகக்கோப்பை எங்களுக்கு தான் என்று கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த ஹார்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து கூறுகையில், 50 ஓவர் உலக கோப்பையை எதிர்பாராதவிதமாக நாங்கள் தவறவிட்டுவிட்டோம்.

அதில் இருந்து மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது. அதுமட்டுமின்றி காயம் காரணமாகவும் சில மாதங்கள் நான் இடைவெளி எடுத்துக்கொண்டேன்.

தற்போது என்னுடைய இலக்கு முழுவதும் அடுத்த டி20 உலகக் கோப்பையை வெல்வதுதான். 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு என்னுடைய பயிற்சியை அதிகப்படுத்தி வருகிறேன்.

மேலும் அந்த தொடரில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெறவும் நான் பாடுபடுவேன் என்னுடைய இலக்கு அதுதான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்