மைதானத்தில் பொழிந்த சிக்சர் மழை.. கெய்ல் அணியை தவிடுபொடியாக்கிய பொல்லார்டு அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

கரீபியன் லீக் தொடரில் பொல்லார்டு தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சிக்சர்களாக பறக்கவிட்டு, 20 ஓவரில் 267 ஓட்டங்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியில், பொல்லார்டு தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய டிரின்பாகோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் சிம்மோன்ஸ் 42 பந்துகளில் 86 ஓட்டங்களும், காலின் முன்ரோ 50 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்களும் குவித்தனர். அணித்தலைவர் பொல்லார்டு 17 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் விளாசினார்.

CPL

CPL T20/Getty Images

பின்னர் ஆடிய ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 62 ஓட்டங்களும், கெய்ல் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

கரீபியன் லீக் தொடரில் பொல்லார்டு அணி குவித்த இந்த ஸ்கோர் தான் அதிகபட்சம் ஆகும். அத்துடன் டி20 வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

Randy Brooks/Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்