இந்தியாவுக்கு முதல் உலகக் கிண்ணத்தை பெற்றுத் தந்த கபில்தேவ்.. கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஹரியானா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முறையாக உலகக் கிண்ணத்தை பெற்றுத் தந்தவர், முன்னாள் தலைவர் மற்றும் ஆல்-ரவுண்டர் வீரர் கபில்தேவ்.

இவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 1983ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

வெற்றிகரமான அணித்தலைவராக விளங்கிய கபில்தேவ் 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும், 5000 ஓட்டங்களுடன் 400க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அசாத்திய சாதனையையும் தன்னகத்தே அவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்படும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக கபில்தேவ் நியமிக்கப்பட உள்ளதாக, அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்.

Virenda Saklani/Gulf News

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்