துடுப்பாட்டத்திலும் அவுஸ்திரேலியாவுக்கு தண்ணி காட்டிய இங்கிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்சில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் குவித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 225 ஓட்டங்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 3வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பர்ன்ஸ் 20 ஓட்டங்களிலும், ஜோ ரூட் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், டென்லியுடன் கைகோர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்களின் அபார ஆட்டத்தினால் இங்கிலாந்து 200 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 214 ஆக இருந்தபோது, பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டங்களில் லயன் பந்தில் போல்டானார்.

Glyn KIRK

அடுத்து டென்லியும் 94 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். அதன் பின்னர் பேர்ஸ்டோவ், சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

Twitter@englandcricket.

எனினும் ஜோஸ் பட்லர் 63 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதுவரை அந்த அணி 382 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய தரப்பில் லயன் 3 விக்கெட்டுகளையும், சிடில் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்