அது எங்களுக்கு விரும்பத்தகாத நிகழ்வு.. ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறுசெய்துவிட்டோம்! புலம்பும் அவுஸ்திரேலிய அணித்தலைவர்

Report Print Kabilan in கிரிக்கெட்

DRS முறையை சரியாக பயன்படுத்தாததால் விரும்பத்தகாத நிகழ்வாக மாறிவிட்டதாக, அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

லீட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியுற்றதற்கு காரணம், அணித்தலைவர் டிம் பெய்னின் தவறான முடிவு தான்.

அவர் DRS முறையை தேவையில்லாமல் வீணடித்ததால், முக்கியமான கட்டத்தில் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது. லயன் வீசிய பந்தில் ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

அப்போது அவுஸ்திரேலிய வசம் DRS இல்லாததால் எதிர்த்து கேட்க முடியவில்லை. பின்னர் தான் அது அவுட் என்று தெரிந்தது. இதனால் அந்த அணியின் வெற்றி நழுவி போனது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டின் 3ஆம் நாள் ஆட்டத்தின்போதும், அவுஸ்திரேலியா DRS முறையை சரியாக பயன்படுத்தவில்லை.

இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் கூறுகையில்,

‘நான் DRS வாய்ப்பை தவறாக கையாண்டு விட்டேன். இதைப்பற்றி எப்படி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. அதை நினைத்தாலே எங்களுக்கு விரும்பத்தகாத நிகழ்வாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறு செய்துவிட்டோம். இதற்கு முன்பே, டெஸ்ட் போட்டிகளில் நடுவர்கள் வேலை மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளேன். கடினமான வேலையை செய்யும் நடுவர்கள் மீது எனக்கு தற்போது புதிய மரியாதை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்