டோனி ஓய்வு முடிவு குறித்து இவர் தான் முடிவெடுக்க வேண்டும்! இந்திய அணியின் ஜாம்பவான் பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழுவினரும், விராட் கோஹ்லியும் தான் முடிவெடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் அடிக்கடி அவர் ஓய்வு பெறும் விடயம் தொடர்பாக வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து பேசிய சவுரவ் கங்குலி, டோனியின் எதிர்காலம் குறித்து விராட் கோஹ்யும், தேர்வுக் குழுவினரும் முடிவு செய்ய வேண்டும் . தேர்வுக்குழுவினரும், கோஹ்லியும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் முக்கியமானவர்கள்.

எனவே, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா வெல்லும் என நம்புகிறேன்.

இந்தியா பிடித்தமான அணி, இதோடு சொந்த மண்ணில் இந்தியா ஒரு ஆபத்தான அணியும் கூட. பல ஆண்டுகளாக அவர்களை வெல்வது மிகவும் கடினமாக உள்ளது.

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்