டோனி போன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த பேர்ஸ்டோ.... மிரண்டு நின்ற அவுஸ்திரேலிய வீரர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில், பேர்ஸ் டோ செய்த ஸ்டம்பிங், டோனியை போன்றே இருந்ததாக கூறி அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் தொடர் 2-2 என்று சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கடந்த 12-ஆம் திகதி துவங்கியது. இதில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த ஐந்தாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் லபுஷேனின் விக்கெட்டை விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் உதவியுடன் வீழ்த்தினார் ஜாக் லீச்.

முக்கியமான இந்த இன்னிங்ஸில் லபுஷேன் வெறும் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். லீச் வீசிய பந்தை ஒரு ஸ்டெப் இறங்கிவந்து அடிக்க முயன்ற லபுஷேன், அந்த பந்தை அடிக்காமல் விட, அதை பிடித்து டோனி ஸ்டைலில் மின்னல்வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் பேர்ஸ்டோ.

பேர்ஸ்டோவின் இந்த மின்னல்வேக ஸ்டம்பிங், அப்படியே தோனியின் ஸ்டம்பிங்கை பார்த்தது போலவே இருந்தது என்று சமுகவலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்