கோஹ்லிக்கும் இந்த வீரருக்கும் கண்டிப்பாக மைதானத்தில் அனல் பறக்கும்... தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயிண்டன் டி காக்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லிக்கு, ரபாடா கடும் சவால் கொடுப்பார் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டிகாக் கூறியுள்ளார்.

குயிண்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதலில் இரு அணிகளுக்கிடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவரான டி காக், இந்த போட்டி குறித்து கூறுகையில், இது ஒரு நல்ல தொடர், இந்திய அணியில் கோஹ்லி எப்படி ஒரு துருப்பு சீட்டாக இருக்கிறாரோ, அதே போன்று அவர் விக்கெட்டை எடுப்பதற்கு எங்கள் அணியில் ரபாடா இருப்பார்.

இரண்டு பேருமே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோஹ்லி, ரபாடா ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள்.

அவர்கள் இருவருக்கும் இடையேயானா போட்டி அபாரமானது. இருவருமே ஆக்ரோஷமான வீரர்கள். எனவே அவர்களுக்கு இடையேயான போட்டியும் மோதலும் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்