டோனியா? பாண்டிங்கா? யார் சிறந்த அணித்தலைவர்.. முன்னாள் வீரரின் பதில்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் டோனி அல்லது ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த அணித்தலைவர் என்ற கேள்விக்கு, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி பதிலளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங், தனது அணிக்கு உலகக்கிண்ணம் உட்பட பல சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனியும் தனது அணிக்கு ஒருநாள், டி20 உலகக்கிண்ணம் தொடர்களை வென்று கொடுத்துள்ளார்.

Google

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி, யார் சிறந்த ஒருநாள் அணித்தலைவர் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டோனி அல்லது ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த அணித்தலைவர் என்றே கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இது கடினமான முடிவுதான்.

இருந்தாலும், ரிக்கி பாண்டிங்தான் சிறந்த ஒருநாள் அணித்தலைவர் என்று நான் கூறுவேன். எம்.எஸ். டோனியின் கீழ் ஒருநாள் போட்டியில் விளையாடியது கிடையாது. ஆகவே, ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைசிறந்த நடுவரிசை வீரராக திகழ்ந்த மைக் ஹஸ்ஸி, ஐ.பி.எல் லீக் தொடரில் டோனியின் தலைமையின் கீழ் சென்னை அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்