தயவுசெய்து ரிஷாப் பண்ட்டை மாத்துங்க..! எழுந்துள்ள கடும் விமர்சனம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், ரிஷாப் பண்ட்டின் துடுப்பாட்ட வரிசையை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக 4வது வரிசையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலை உலகக் கிண்ணத் தொடரிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, இளம் வீரர்களான மனீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களம் கண்டனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியில் 4வது வரிசை இடத்தை அவர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மறுமுனையில் ரிஷாப் பண்ட் மோசமான ஷாட்களை அடித்து தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார். அத்துடன் மிகக் குறைவான ஓட்டங்களே எடுத்து வருகிறார். இந்நிலையில் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொஹாலியில் நடந்த 2வது போட்டியில் ரிஷாப் பண்ட்டை 4வது வரிசையில் கோஹ்லி களமிறக்கினார்.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பண்ட், தவறான ஷாட் ஆடி 4 ஓட்டங்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் அவருக்கு 4வது வரிசை துடுப்பாட்டம் சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், மூன்றாவது டி20 போட்டியில் 4வது வரிசையில் ரிஷாப் பண்ட்டுக்கு பதிலாக, ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்