எதிர்பாராத நேரத்தில் வேகமாக தாக்கிய பந்து... லேசான காயத்துடன் தப்பிய பந்து வீச்சாளர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
166Shares

நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மிக்கி எட்வர்ட்ஸ் குயின்ஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மார்ஷ் கோப்பை போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்த் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது.

306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய குயின்ஸ்லாந்து அணி 48 ஓவர்கள் முடிந்த போது 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மிக்கி எட்வர்ட்ஸ் வீசிய பந்தை, மட்டையளர் வேகமாக அடிக்க மாட்டியாளரை நோக்கி திரும்பியுள்ளது.

தலையில் பட்டு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையில், எட்வார்ட் கையை நீட்டி தடுத்ததால், மிகப்பெரிய காயத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இதில் அவருடைய கைப்பகுதியில் மட்டும் பலத்த காயமடைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்