கோஹ்லி படையை தனி ஒருவனாக கதற விட்ட டி காக்... மைதானத்தில் பறந்த வானவேடிக்கை! அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டி காக்கின் அபார அரைசதத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானததில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கோஹ்லி களம் இறங்கினார். தவான் அதிரடியாக விளையாடினாலும், விராட் கோஹ்லி ஓட்டங்கள் சேர்க்க திணறினார்.

தவான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ஓட்டங்கள் குவித்தார். தவான் ஆட்டமிழக்கும் போது இந்தியா 7.2 ஓவரில் 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தவான் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கோஹ்லி 15 பந்தில் 9 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்தியாவின் எண்ணிக்கை அப்படியே தவழ ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 19 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 ஓட்டங்களிலும், குருணால் பாண்டியா 4 ஓட்டங்களிலும் வெளியேறினார்.

ஜடேஜா 17 பந்தில் 19 ஓட்டங்கள் சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும் போர்ச்சுன் மற்றும் ஹென்ரிக்ஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு டிகாக் மற்றும் ஹென்றிக்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஹென்றிக்ஸ் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அரை சதம் அடித்த டிக் காக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 1-1 என சமன் செய்தது.

இப்போட்டியில் தனி ஒருவனாக இந்திய அணியின் பந்து வீச்சை டி காக் வானவேடிக்கை காட்டினார், இதில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்