டோனியின் அருகே அந்த வீரர் போகுறது அவ்வளவு எளிது கிடையாது... யுவராஜ் சிங் சொன்ன காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனிக்கான மாற்று வீரரை உருவாக்க சில காலம் பிடிக்கும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது கிரிக்கெட் உலகில் பெரிய விவாதமாக சென்று கொண்டிருப்பது டோனியின் ஓய்வைப் பற்றி தான், ஆனால் டோனி இதைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், தன்னுடைய வேலையை செய்து வருகிறார்.

இடையில் கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டோனியைப் பற்றிய புகைப்படம் பதிவிட்டதால், டோனி ஓய்வு பெறப்போவது உறுதி, அதற்கு தான் கோஹ்லி இப்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

ஆனால் அதுவும் கடைசியில் வதந்தியிலே போய் முடிந்தது. எப்படி இருந்தாலும் டோனி இன்னும் சில மாதங்களில் ஓய்வை அறிவித்துவிடுவார், ஆனால் அவருக்கான மாற்று வீரரை தான் இன்னும் இந்திய அணி கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

இளம் வீரர் ரிஷப் பாண்ட் மிரட்டுவார் என்று பார்த்தால், கடைசியாக விளையாடிய தொடர்களில் அவரின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் டோனி ஓய்வு பற்றி கூறுகையில், டோனி இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார், அவர் இந்தியாவின் வெற்றிகரமான தலைவர், ஆகவே அவருக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.

அவர் எப்போது ஓய்வு பெற வேண்டுமென்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். அவர் இன்னும் விளையாட விரும்பினால் அது அவரது முடிவு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ரிஷப் பண்ட்டை டோனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமற்றது, டோனியே, டோனி ஆவதற்கு நிறைய ஆண்டுகள் பிடித்தன, டோனிக்கு நெருக்கமாகச் செல்ல ரிஷப் பண்ட்டுக்கு நிறைய காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்