பாகிஸ்தான் விமான நிலையத்தில் இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணம் கருதி பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பமில்லை என முன்னணி வீரர்களான மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உட்பட பல வீரர்கள் பின்வாங்கினர்.

அதனைத் தொடர்ந்து, லஹிரு திரிமன்னே தலைமையிலான இளம் அணி தெரிவு செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விமான நிலையத்தில், இலங்கை வீரர்கள் தரையிறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோவை Sri Lanka Cricket தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, கராச்சியில் வரும் 27ஆம் திகதி நடக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்