3 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை சரித்த வீராங்கனை!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, டி 20 போட்டியில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய முதல் இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நாணய சூழலில் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 130 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்களை குவித்திருந்தார். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், Mignon du Preez (59) தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால், அந்த அணி ஒரு பந்து மட்டுமே எஞ்சிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தன்னுடைய முதல் மூன்று ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி 20 போட்டியில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய முதல் இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்