கொஞ்சமாவது மூளையை பயன்படுத்து.... கோஹ்லியையே மிஞ்சும் அளவிற்கு ஆக்ரோசம் காட்டிய ரோகித் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மா, வேகப்பந்து வீச்சாளர் சைனியிடம் ஆக்ரோசமாக கத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்று சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை டிகாக் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் டிகாக்கின் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்த நிலையில், போட்டியின் 12 ஓவரை வீச வந்த நவ்தீப் சைனி அந்த ஓவரில் அதிகப்படியான ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இதனால் பொறுமை இழந்த ரோஹித் சர்மா மூளைய யூஸ் பண்ணி பந்துவீசு என நவ்தீப் சைனியை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலானதால், வீடியோவைக் கண்ட இணையவாசிகள், இவர் கோஹ்லியையே கோபத்தில் மிஞ்சிவிடுவார் போல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்