பல தடைகளை கடந்து நடக்கவிருந்த இலங்கை-பாகிஸ்தான் போட்டி.. கனமழையால் ரத்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

கராச்சியில் இன்று நடக்க இருந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கனமழையால் கைவிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடக்க இருந்தது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் கராச்சியில் நடக்கும் முதல் ஒருநாள்போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

அத்துடன் பலத்த பாதுகாப்புடன் இலங்கை அணி களம் இறங்க இருந்தது. இந்நிலையில், இன்று மதியம் போட்டி தொடங்க இருந்த நிலையில், திடீரென கனமழை பெய்தது.

மழை நின்றாலும் மைதானத்தை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் இதே மைதானத்தில் நடக்க உள்ளது.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்