கோஹ்லியின் கேப்டன் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம்: யுவராஜ் சிங் யோசனை

Report Print Kabilan in கிரிக்கெட்

மூன்று வகையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட் கோஹ்லி கேப்டனாக இருப்பதால், அவரது வேலை பளுவை குறைக்க டி20 கேப்டன் பதவியை ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்கலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

அத்துடன் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

ஆனால், டெஸ்ட் போட்டியில் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், டி20 கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவை தலைவராக நியமிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

AP

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை கிரிக்கெட் முறைதான் இருந்தது. இதனால் ஒரே அணித்தலைவர் என்பது சரியானதாக இருந்தது.

தற்போது மூன்று வகை கிரிக்கெட் இருக்கிறது. விராட் கோஹ்லி வேலைப்பளு அதிகம் என்று உணர்ந்தால், மற்றொருவரிடம் டி20 அணி கேப்டன் பொறுப்பை கொடுக்க முயற்சி செய்யலாம். ரோஹித் ஷர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன்.

விராட் கோஹ்லியின் வேலைப்பளுவை அணி நிர்வாகம் எப்படி எடுத்துக் கொள்ள போகிறது என்று எனக்கு தெரியாது. அவர்கள் டி20யில் ஏதாவது செய்ய விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி செல்ல இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது.

விராட் கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரர். அவரது வேலைப்பளுவை எப்படி நிர்வகிப்பார்?. இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்