டோனியை விட சிறந்த விக்கெட் கீப்பர்.. 30 வயதில் ஓய்வு அறிவிப்பு! சொன்ன அதிர்ச்சி காரணம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர், தனது 30வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர்களாக புகழப்படுபவர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா), மார்க் பவுச்சர் (தென் ஆப்பிரிக்கா), டோனி (இந்தியா). ஆனால், இவர்களை விட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் திறமை வாய்ந்தவராக புகழப்படுகிறார்.

இவர் 126 ஒருநாள் போட்டிகளில் 87 கேட்சுகள் மற்றும் 51 ஸ்டம்பிங் செய்துள்ளார். அதேபோல் 90 டி20 போட்டிகளில் 51 ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு தனது 17வது வயதில், சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சாரா டெய்லர், சுமார் 13 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

Reuters

இதுவரை மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து, 226 போட்டிகளில் 6533 ஓட்டங்கள் குவித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த 2வது வீராங்கனை என்ற பெருமையையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் சாரா. 30 வயதே ஆகும் இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் போட்டிகளின் இடையே பதற்றம் அடைந்தார். இதன் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

முன்பே டி20 போட்டிகளில் இருந்து விலகிய சாராவுக்கு, ஆஷஸ் தொடர் தான் கடைசி கிரிக்கெட் தொடராக அமைந்தது. தற்போது ஓய்வு முடிவை அறிவித்த அவர், இங்கிலாந்து அணியின் உடையை அணிந்ததற்கு பெருமைபடுவதாக குறிப்பிட்டு, தன் கிரிக்கெட் வாழ்விற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மூன்று முறை உலகக் கிண்ண தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் சாரா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்