இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதவிக்கு ஆபத்தா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்தா என கேள்வியெழுந்த நிலையில் அது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் உள்ள கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமிக்கு இரட்டை ஆதாய பதவி குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனால் அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்று பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வினோத் ராய், ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்தெல்லாம் ஒன்றுமே இல்லை.

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் இரட்டை ஆதாய பதவி குறித்த ஆவணங்கள் பெறப்பட்டுத்தான் நியமிக்கப்பட்டார்கள்.

அவர்கள் இரட்டை ஆதாய பதவியில் இருப்பதாக பிசிசிஐ கருதவில்லை. அதன்பின்னர் தான் அவர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சியாளரை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் ஒரே பணி தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதுதான்.

முறையாக அந்த பணி மேற்கொள்ளப்பட்டு ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகியுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்