ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் விராட் கோஹ்லி தைரியமாக முடிவுகளை எடுக்கிறார்! முன்னாள் இந்திய வேகப்புயல்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தைரியமாக முடிவுகளை எடுப்பதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி மற்றும் தற்போதைய அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரை ஒப்பிட்டு, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான அவர் கூறுகையில், ‘தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு அசுர பலம் கொண்டு இருப்பதை உலகுக்கு நிரூபித்து வருகிறார்கள்.

AFP

வெளிநாட்டு மண்ணில் நமது அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சவுரவ் கங்குலி ஏற்படுத்தினார். களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு நம்மை கவர்ந்து, அதனை பின்பற்ற வழிவகுத்தது.

விராட் கோஹ்லி நிறைய விடயங்களில் முன்னாள் அணித்தலைவர் கங்குலியைப் போல் செயல்படுகிறார். ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய அவர், முடிவுகளை தைரியமாக எடுத்து வருகிறார். நெருக்கடியான நிலையிலும் கூட விராட் கோஹி அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார்.

அத்துடன் அவருடைய துடுப்பாட்ட திறமை அணியை வழி நடத்துவதில் பிரதிபலிக்கிறது. அவர் ஒருநாளில் நமக்கு உலகக்கிண்ணத்தை வென்று தருவதை பார்க்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்